காவியத்தின் தலைவனே

give thanks in all things

கல்வாரி நாயகனே காருண்ய கரத்தினால் கரம் பிடித்த மன்னவனே கழுதையின் மேல் அமர்ந்து வந்த இஸ்ரவேலின் இரட்சகரே. உம் அன்பு என்னை தாங்குகின்றதே. கற்பாறையில் உதித்த பெரு வெள்ளமே காலை தோறும் உம் கிருபை புதிதாய் இருக்கிறதே. என் கண்கள் உம்மை காங்கின்றதே கலங்கரை விளக்கமும் கவிதையின் ஊற்றும் நீரே. கானமே அமுத கானமே காவியத்தின் தலைவனே கன்னி மரியாள் வயிற்றில் கனிவான செல்வமாய், யோசேப்பின் குமாரனாய் பிறந்த நல்முத்தே. பூமியின் குடிகளில் தானும் ஒருவராய் எங்கள்…

இ ஈ

இனியவரே! இணையில்லாதவரே! ஈகையின் நாயகனே, உம்மையே எனக்காய் ஈந்தவரே. இனிய கானமே, ஈடில்லா இன்பமே, இதயத்தில் இனிதாய் கலந்த என் செல்வமே! இஸ்ரவேலின் ராஜாவே! சிம்மாசனத்தில் வீற்றிருப்பவரே, இன் சொல்லாய் பிறந்து இனியவளை உயிற்பித்தவரே! இணைத்தீரே, இசை மழையில் இணைத்தீரே! விண்ணும் மண்ணும் ஒன்றாய் கலந்தனவே! சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். சங் 85:11 ... #இ #ஈ Image: google